சீன அதிபரை வரவேற்குமாறு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழகம்
Updated Oct 09, 2019 | 16:51 IST | Times Now

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இடையே மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதுடன், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளதாக முதல்வர் பழனிசாமி கருத்து.

Chief Minister Edappadi K Palaniswami, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | Photo Credit: DIPR TN 

சென்னை: சீன அதிபரின் வருகை தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.

சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இடையே அக்டோபர் 11, 12 தேதிகளில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளதாகக் கூறிய முதல்வர் பழனிசாமி, இந்நிகழ்ச்சிக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு தலைவர்களை வரவேற்பதாக முதல்வர் பழனிசாமி கூறினார். 1956-ல் அன்றைய சீன பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பாந்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த முதல்வர் பழனிசாமி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் இச்சந்திப்பு நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளதாகக் கூறினார்.

பண்டைய சீன நாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்றும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம் இச்சந்திப்புக்கு தேர்வு செய்யப்பட்டது பொறுத்தமானது என்றும் கூறிய முதல்வர் பழனிசாமி, சீன நாட்டிற்கு மாமல்லபுரம் வழியாக கடல்வழி வியாபாரம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

NEXT STORY
சீன அதிபரை வரவேற்குமாறு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் Description: சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இடையே மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதுடன், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளதாக முதல்வர் பழனிசாமி கருத்து.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்