பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை: கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி

தமிழகம்
Updated Aug 23, 2019 | 17:50 IST | Times Now

பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, சிறப்புக் காவல் படையினர், அதி விரைவுப் படையினர் , மாநகரப் போலீஸார் என மொத்தம் 2 ஆயிரம் பேர் கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Terror Alert Issued In Coimbatore
Terror Alert Issued In Coimbatore   |  Photo Credit: ANI

கோவை: பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலை அடுத்து கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாநகர ஆணையர் சுமித் சரண் கூறியுள்ளார்

தமிழகத்திற்குள் லஷ்கர்-ஐ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை நேற்று தமிழக காவல்துறைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அவர்கள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 6 பேரும் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோயில்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக கமாண்டோ படையினரும் கோவையில் முகாமிட்டுள்ளனர். 

இந்தச் சூழலில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,  பயங்கரவாதிகள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை யாரும் பிடிபடவில்லை. சந்தேகத்துக்குரிய நபர்களின் புகைப்படம் என எதையும் நாங்கள் வெளியிடவில்லை. சிறப்புக் காவல் படையினர், அதி விரைவுப் படையினர் , மாநகரப் போலீஸார் என மொத்தம் 2 ஆயிரம் பேர், கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...