அன்பு சகோதரிக்கு வாழ்த்துகள் - தமிழிசையை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்!

தமிழகம்
Updated Sep 01, 2019 | 15:44 IST | Times Now

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tamilisai - M.K.Stalin
தமிழிசை - மு.க.ஸ்டாலின்  |  Photo Credit: Twitter

தெலுங்கானா ஆளுநராக இன்று பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர் கட்சியாக இருந்தாலும் இந்த செய்தியைக் குறிப்பிட்டு அன்புச் சதோகதிரிக்கு என் வாழ்த்துக்கள் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். 

இன்று ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி  தெலுங்கானாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதுபோலவே கேரளாவுக்கு ஹாரிஃப் முகமது கானும் ஹிமாச்சல் பிரதேசத்திற்கு பண்டாரு தத்தாத்ரேயாவும்,  மகாராஷ்டிராவில் பகத்சிங் கோஷ்யாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹிமாச்சல் ஆளுநர்த் தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன், கேரள ஆளுநர் சதாசிவம், மகாராஷ்டிராவின் ஆளுநர் வித்யா சாகர் ராவ் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘’பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்! அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

2014ஆம் ஆண்டு முதல் தமிழக பிஜேபி தலைவராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பதவி காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. தற்போது அவர் தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்க இருப்பதால் தமிழக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...