யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்வார்கள் - மு.க.அழகிரி

தமிழகம்
Updated Apr 18, 2019 | 13:18 IST | Times Now

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை, டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி காந்தியுடன் வந்து வாக்களித்தார்.

முன்னாள் திமுக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி
DMK Ex Minister MK Alagiri, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி  

மதுரை: யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்வார்கள் என முன்னாள் திமுக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாக்களித்த பின் பேட்டியளித்துள்ளார்.

17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில்,  2-வது கட்டமாக கர்நாடாக, அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. புதுச்சேரியில் தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாது வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மதுரை சித்திரை திருவிழா காரணமாக அங்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர். 

அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். மதுரை ஆயிர வைசியர் பள்ளி வாக்குச்சாவடியில் மதுரை ஆதீனம் வாக்களித்தார்.  அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை, டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியின் தனது மனைவி காந்தியுடன் வந்து வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, என்னுடைய வாக்கை நான் பதிவு செய்து விட்டேன். யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். மதுரை மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழுத்தாளர் சு. வெங்கடேசன் களத்தில் உள்ளார். 

NEXT STORY
யார் வெற்றி பெற வேண்டும் என மக்கள் தான் முடிவு செய்வார்கள் - மு.க.அழகிரி Description: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை, டிவிஎஸ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி காந்தியுடன் வந்து வாக்களித்தார்.
Loading...
Loading...
Loading...