மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் ? டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

தமிழகம்
Updated May 19, 2019 | 20:00 IST | Times Now

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

DMK president MK Stalin, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  |  Photo Credit: Twitter

சென்னை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர்  இணைந்து நடத்திய மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி, தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே- 19 வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடந்து முடிந்துள்ளன. இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 38 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடந்தது. அதிக அளவில் பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. 

இந்நிலையில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர்  இணைந்து நடத்திய மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளன. அந்தக் கருத்துக்கணிப்பின் படி,  திமுக தலைமையிலான கூட்டணி 29 இடங்களிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 9 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

 

 

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 51.6%, அதிமுக கூட்டணி 41.43%, மற்ற கட்சிகள் 6.97% சதவீத வாக்குகளை பெறும் என கூறப்பட்டுள்ளது.

 

 

புதுச்சேரியை பொறுத்தவரை பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்த வரை காங்கிரஸ் கூட்டணி 45.3%, பாஜக கூட்டணி 48.53 %, மற்ற கட்சிகள் 6.17 % வாக்குகளை பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

NEXT STORY
மக்களவைத் தேர்தல் 2019: தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் ? டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு Description: மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
Loading...
Loading...
Loading...