[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம்
Updated Sep 18, 2019 | 15:28 IST | Times Now

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவி வேட்டி, துண்டு அணிந்துள்ளதை சுட்டிக்காட்டி சமூக வலதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது.

DMK agitators smear Hindi wordings at Gudiyattam Railway Station, குடியாத்தம் ரயில் நிலைத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு
குடியாத்தம் ரயில் நிலைத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு  |  Photo Credit: Twitter

வேலூர்: குடியாத்தம் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகள் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளன. இச்செயலில் ஈடுபட்டதாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்திற்குள் திமுக தகவல் தொழிற்நுட்பப் பிரிவு செயலாளர் ஞானப்பிரகாசம் தலைமையில் 22 பேர் கொண்ட குழு திடீரென நுழைந்து பெயர்பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர்.

’தமிழைக் காப்போம்’, ’ஹிந்தியை திணிக்காதே’, ‘தமிழனை எதிர்க்காதே’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இப்போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். செப்டம்பர் 20-ஆம் தேதி ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில் எதிர்பாராத விதமாக அதற்கு முன்னதாகவே தற்போது குடியாத்தத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவி வேட்டி, துண்டு அணிந்துள்ளதை சுட்டிக்காட்டி சமூக வலதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது.

NEXT STORY