68-வது பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த்: தலைவர்கள் வாழ்த்து

தமிழகம்
Updated Aug 25, 2019 | 12:29 IST | Times Now

’வறுமை ஒழிப்பு தினமாக’ ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் விஜயகாந்த், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Captain Vijayakanth, கேப்டன் விஜயகாந்த்
கேப்டன் விஜயகாந்த்  |  Photo Credit: Twitter

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். விஜயராஜாக இருந்தவர் சினிமாவுக்காக விஜயகாந்தாக மாற்றப்பட்டார். இதுவரை சுமார் 156 படங்கள் நடித்துள்ள விஜயகாந்த், 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க கட்சியைத் தொடங்கினார். மேலும் தான் போட்டியிட்ட இரண்டாவது தேர்தலிலேயே எதிர்கட்சி அந்தஸ்தும் பெற்றார். இன்று அவருக்கு 68வது பிறந்தநாள். நடிகர், அரசியல்வாதி என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதர். பசி என்று வருபவருக்கு இல்லாமல் உணவளிப்பதே இவரது தனித்துவம். இன்று அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களும் தலைவர்களும் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றார்கள். 

துணை முதலல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”சிறந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான,@iVijayakant அவர்கள் நல்ல உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட எனது நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக,” கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை  சௌந்தர்ராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ”தேமுதிக தலைவர் சகோதரர் கேப்டன் விஜகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து. அவர்கள் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டி வாழ்க நூறாண்டு என பாஜக சார்பில் வாழ்த்துவதாக,” தெரிவித்துள்ளார்.

67 ஆண்டுகள் பூர்த்தி செய்து 68-வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் விழயகாந்த்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.

’வறுமை ஒழிப்பு தினமாக’ ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் விஜயகாந்த், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி தேமுதிகவின்  மத்திய சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பில் வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

NEXT STORY
68-வது பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த்: தலைவர்கள் வாழ்த்து Description: ’வறுமை ஒழிப்பு தினமாக’ ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் விஜயகாந்த், தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை