களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா.. மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றது யார் தெரியுமா?

தமிழகம்
Updated Apr 16, 2019 | 12:56 IST | Times Now

மிஸ் கூவாகம் 2019 அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.

Miss Koovagam 2019, மிஸ் கூவாகம் 2019
மிஸ் கூவாகம் 2019  |  Photo Credit: YouTube

விழுப்புரம்: 2019-ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி கூவாகம் கிராமத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது கூத்தாண்டவர் கோயில். ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள் வந்து இந்தத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். 

சித்திரைத் திருவிழாவிற்கு வரும் திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் விதமாக "மிஸ் கூவாகம்" எனப்படும் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான அழகிப் போட்டி விழுப்புரம் நகராட்சி பள்ளியில் திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை  நடைபெற்றது. 

தமிழகம் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்ற இந்தப்போட்டியில், மிஸ் கூவாகமாக தருமபுரியைச் சேர்ந்த நபீஷா முதலிடம் பிடித்தார். கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாம் இடமும், பவானியைச் சேர்ந்த ருத்ராவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தன. இந்த நிகழ்ச்சியில் மக்கள் இசை பாடகர்கள் செந்தில், ராஜலட்சுமியி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

NEXT STORY
களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா.. மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றது யார் தெரியுமா? Description: மிஸ் கூவாகம் 2019 அழகிப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.
Loading...
Loading...
Loading...