சீன அதிபரின் சென்னை பயணதிட்டம் - முழு விவரம்

தமிழகம்
Updated Oct 10, 2019 | 10:50 IST | Times Now

வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு சென்னையில் தரையிறங்கும் சீன அதிபர், மறுநாள் பிற்பகல் 1:30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

Xi Jinping's Hongqi L5 car
ஷி ஜிங்பின் பயணிக்கும் ஹாங்கி எல் 5 கார்  |  Photo Credit: Twitter

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு 11, 12 தேதிகளில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சீன அதிபரின் பயண விவரம் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து 1:45 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு 2:05 மணிக்கு வருகிறார். மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு 4:55 மணிக்கு மாமல்லபுரம் சென்றடைகிறார். பின்னர், இரவு 8:05 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9:00 மணிக்கு கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு வருகிறார்.

மறுநாள் காலை 9:05 மணிக்கு கிண்டியில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ரிசார்ட்டுக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து நண்பகல் 12:45 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1:25 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு, ஷி ஜின்பிங்கிற்கு வழியனுப்பு விழா நடைபெறுகிறது. 1:30 மணிக்கு அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.

ஷி ஜின்பிங் பயணிக்க சீனாவில் இருந்து பிரத்யேக கார்கள் விமானம் மூலம் வந்திறங்கின. சீனாவின் FAW நிறுவனம் தயாரித்துள்ள ஹாங்கி எல் 5 (Hongqi L5) கார் மூலம் சென்னை சாலைகளில் ஷி ஜின்பிங் பயணிக்க உள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த காரின் விலை சுமார் ரூ.5.60 கோடி ஆகும். 3,150 கிலோ எடை கொண்ட இந்த கார் 408 குதிரைத் திறன் உடையது. 10 வினாடியில் 100 கி.மீ வேகம் செல்லக்கூடிய இந்த கார் கண்ணாடிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைக்காது. ராக்கெட் லாஞ்சர் கொண்டு தாக்குதல் நடத்தினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

NEXT STORY