பிரதமர் மோடியின் சென்னைப் பயணத்திட்டத்தின் முழு விவரம்

தமிழகம்
Updated Oct 11, 2019 | 09:59 IST | Times Now

11:40 வரை நீளும் இந்த சந்திப்புக்குப் பிறகு 12:45 வரை மதிய விருந்து அளிக்கிறார் பிரதமர்.

மோடி - ஜின்பிங்
மோடி - ஜின்பிங்  |  Photo Credit: Twitter

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிதமர் மோடியும் இரண்டு நாட்கள் மாமல்லபுரத்தில் தங்கிப் பேச்சுவார்த்தை செய்ய இருப்பதால் சென்னையே விழாகோலம் பூண்டுள்ளது. சீன அதிபரின் பயணத்திட்டம் குறித்த தகவல்கள் நேற்று வெளியான நிலையில் தற்போது பிரதமரின் பயணத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 9:45க்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 12:30 மணிக்கு வருகைபுரிகிறார். பின் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு கோவளம் அருகே உள்ள தாஜ் ஹோட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு, மாலை 4:45 மணிக்கு கோவளத்தில் இருது புறப்பட்டு மாமல்லபுரம் சென்று சீன அதிபரை சந்திக்கிறார். அங்கே இருவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் முடிந்து இருவரும் 6:45 முதல் 8 மணிவரை பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். 

சீன அதிபரின் பயணத்திட்டத்தைப் பார்க்க...

பின் இரவு பிரதமர் தனது தாஜ் ஹோட்டலுக்குப் புறப்பட சீன அதிபர் கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு செல்கிறார். பின் மறுநாள் 10:00 மணி அளவில் பிரதமர் தங்கியுள்ள தாஜ் ஹோட்டலில் அமர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார்கள். 11:40 வரை நீளும் இந்த சந்திப்புக்குப் பிறகு 12:45 வரை மதிய விருந்து அளிக்கிறார் பிரதமர். பின் மதியம் 1:40க்கு தாஜ் ஹோட்டலில் இருந்து கிளம்பி 2:00 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் டெல்லிக்குப் பயணிக்கிறார் பிரதமர்.
 

NEXT STORY