வேலூர் மக்களவை தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி

தமிழகம்
Updated Jul 08, 2019 | 10:15 IST | Times Now

நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Deepalakshmi as the candidate for lok sabha polls in vellore
வேலூர் மக்களவை தேர்தல் நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமி   |  Photo Credit: Twitter

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி  தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 19ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 

வேட்பு மனுக்களை திரும்பப்பெற 22ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 5ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " நடக்கவிருக்கிற வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார்.

 

 

கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், மாநில முழுவதும் உள்ள உறவுகள் அனைவரும் இக்களத்தில் பங்கேற்று தங்களது அளப்பெரியப் பங்களிப்பை செலுத்தி வெற்றிக்கு உழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியில்  அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும் போட்டியிடுகிறார்கள். 

NEXT STORY
வேலூர் மக்களவை தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி Description: நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles