ஏப்ரல் 30-ல் வட தமிழகம் அருகே ஃபானி புயல் வரக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்
Updated Apr 26, 2019 | 15:27 IST | Times Now

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற படையினர், ஊர்க்காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

cyclone fani updates
cyclone fani updates  |  Photo Credit: Twitter

சென்னை: ஏப்ரல் 30-ம் தேதி வடதமிழகத்தின் கடலோர பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக மாறியுள்ளது. தொடர்ந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறும் அந்த புயலுக்கு பானி புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 27-ம் தேதி புயலாக மாறி வடகிழக்கு திசையில் நகர்ந்து ஏப்ரல் 30-ம் தேதி வலுப்பெற்று வட தமிழகம் கடற்கரை பகுதியையொட்டி நகரக்கூடும். இதனால் மீனவர்கள் இன்றும் நாளையும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். 30-ம் தேதி தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தென் மேற்கு வங்கக் கடலில் கடல் சீற்றம் தற்போது அதிகமாக காணப்படுகிறது. புயலின் நகர்வைப் பொறுத்து வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து வரும் 30 மற்றும் 1-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நாகை, காரைக்கால், புதுச்சேரி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். புயல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனையில் வருவாய் நிர்வாக ஆணையர் வருவாய் நிர்வாக ஆணயர் சத்ய கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தச் சூழலில் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்க காவல் துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற படையினர், ஊர்க்காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
NEXT STORY
ஏப்ரல் 30-ல் வட தமிழகம் அருகே ஃபானி புயல் வரக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் Description: புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற படையினர், ஊர்க்காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை