குற்றாலத்தில் சீசன் தொடங்கியது.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்

தமிழகம்
Updated Jun 10, 2019 | 12:04 IST | Times Now

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டும். இந்த மூன்று மாத காலத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

Courtallam five falls, குற்றாலம் ஐந்தருவி
குற்றாலம் ஐந்தருவி  |  Photo Credit: Facebook

நெல்லை:  குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்வதால் ஐந்தருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவ மழை காரணமாக கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி என 9 அருவிகள் உள்ளன. 

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் இங்கு சீசன் களைகட்டும். அந்த சமயத்தில் சாரல் மழையும், குளுகுளு காற்றும் வீசுவதால் அதை அனுபவித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த மூன்று மாத காலத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். 

இந்தாண்டு தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில் ஐந்தருவியில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. இதனால் சீசனை அனுவிப்பதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிய தொடங்கியுள்ளனர். 
 
NEXT STORY
குற்றாலத்தில் சீசன் தொடங்கியது.. சுற்றுலா பயணிகள் உற்சாகம் Description: ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டும். இந்த மூன்று மாத காலத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை