வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம்
Updated Oct 09, 2019 | 16:40 IST | Times Now

மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Regional Meteorological Centre Chennai, சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்  |  Photo Credit: Twitter

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கரூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துகுடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சிசும் இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் போட் கிளப் பகுதியில் 8 செ.மீ மழை பதிவானது. தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் 7 செ.மீ மழையும் கொடைக்கானலில் 6 செ.மீ மழையும் பதிவானது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...