தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஹோட்டல்... ரூ.15000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

தமிழகம்
Updated Jul 10, 2019 | 09:19 IST | Times Now

தயிர் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி வரி மற்றும் பார்சல் சார்ஜ் வசூலித்த ஹோட்டலுக்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.

Rs.15,000 fine on hotel for charging GST over curd
Rs.15,000 fine on hotel for charging GST over curd   |  Photo Credit: Getty Images

நெல்லை: தயிர் பாக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஹோட்டலுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திருநெல்வேலியைச் சேர்ந்த மகராஜன் என்பவர் பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் கடந்த பிப்ரவரி மாதம் தயிர் பார்சல் வாங்கியுள்ளார்.  அப்போது தயிரின் விலை 40 ரூபாயுடன் ஜி.எஸ்.டி. 1 ரூபாய்,  எஸ்.ஜி.எஸ்.டி வரியாக 1 ரூபாய், பார்சலுக்காக 2 ரூபாய் என மொத்தம் 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

தயிருக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு ஜிஎஸ்டி வசூலிக்ககூடாது என மகராஜன் ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.ஆனால், ஜிஎஸ்டி மற்றும் பேக்கிங் சார்ஜஸ் சேர்த்துதான் பில்லில் வரும் விருப்பம் இருந்தால் கொண்டு போ அல்லது தயிரை கொட்டிவிட்டு போ என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரூ.44 செலுத்தி தயிர் பாக்கெட்டை வாங்கியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான, மகராஜன் இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்ற தலைவர் தேவதாஸ், உறுப்பினர்கள் சிவன்மூர்த்தி, முத்துலெட்சுமி ஆகியோர் மனுதாரரான மகராஜவுக்கு மன உளைச்சலுக்காக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ. 15 ஆயிரம், கூடுதலாக வசூலிக்கப்பட்ட 4 ரூபாய் என மொத்தம் ரூ. 15 ஆயிரத்து 4 ரூபாய் வழங்க உணவகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் தொகையை வழங்காவிட்டால் 6 சதவீதம் வட்டி விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

NEXT STORY
தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஹோட்டல்... ரூ.15000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம் Description: தயிர் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி வரி மற்றும் பார்சல் சார்ஜ் வசூலித்த ஹோட்டலுக்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles