சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஹெச்.வசந்தகுமார்

தமிழகம்
Updated May 27, 2019 | 09:28 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக ஹெச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

 Congress MLA H Vasanthakumar to resign his post
Congress MLA H Vasanthakumar to resign his post  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் நேரம் ஒதுக்கினால் இன்று தாம் வகித்து வரும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கன்னியாகுமரி தொகுதி எம்.பி. ஹெச். வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். வசந்தகுமார். இவர், எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட  2,59,933 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இந்த வெற்றியின் மூலமாக மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றுள்ளதால் தான் வகிக்கும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து சட்டத்துறை நிர்வாகிகளுடன் வசந்தகுமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வசந்தகுமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் நேரம் ஒதுக்கினால் இன்று ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளேன். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் ஆலோசனைப்படி இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹெச். வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார் ஹெச்.வசந்தகுமார் Description: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக ஹெச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...