சீன அதிபர் வருகை: சென்னையில் எந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்? - முழு விவரம்

தமிழகம்
Updated Oct 10, 2019 | 09:19 IST | Times Now

சீன அதிபர் வருகையையொட்டி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

Chennai
Chennai   |  Photo Credit: Getty Images

சீன அதிபரும் பிரதமர் மோடியும் சென்னை வருவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்றும் மற்றும் நாளையும் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா சாலை, கத்திப்பாரா முதல் சின்ன மலை வரை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ் காந்தி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதால் போக்குவரத்து அதிகரித்து தாமதமாக செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாலைகளில் அமைத்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பயணத்திட்டங்களையும் வழித்தடங்களையும் முன்னேற்பாட்டோடு அமைத்துக் கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் இந்த 2 நாட்களுக்கு காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை மேலே குறிப்பிட்ட சாலைகளில் அனுமதிக்கப்பட மாட்டாது. 

மேலும் 11ஆம் தேதி அன்று மதியம் 12:30 முதல் 2:00 மணிவரை பெருங்களத்தூரி இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் 'O' பாயிண்ட் சந்திப்பில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும். மேலும் சென்னை தென்பகுதியில் இருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக, குரோம்பேட்டை - தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையைப் பயன்படுத்தி செல்லலாம். மேலும் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது போன்று வேறேன்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
NEXT STORY
சீன அதிபர் வருகை: சென்னையில் எந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்? - முழு விவரம் Description: சீன அதிபர் வருகையையொட்டி, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
உங்கள் மருமகளை வரவேற்க மற்றொருவர் மகளை கொல்வதா?- சுபஸ்ரீ மரணத்தில் உயர்நீதிமன்றம் கண்டனம்
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு