சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை

தமிழகம்
Updated Oct 17, 2019 | 17:16 IST | Times Now

பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.

Patna HC Chief Justice A P Sahi
பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹியின் பெயரை கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் அவர் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத அவர், தனது பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்தாா். இதையடுத்து அந்த பதவிக்கு தற்காலிக நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல், மேகாலாயா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் ஏ.கே. மிட்டல் மத்தியபிரதேசம் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வரும் சஞ்சய் கரோல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலிஜீயம் பரிந்துரைத்துள்ளது. 
 

NEXT STORY