வங்கதேச இளைஞரிடம் கோவை போலீசார் தீவிர விசாரணை! பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு?

தமிழகம்
Updated Sep 15, 2019 | 11:49 IST | Times Now

பாகிஸ்தானுடன் தொடர்புடையதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச இளைஞரை பிடித்து கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

file photo
file photo  |  Photo Credit: ANI

கோவை: கோவையில் பாகிஸ்தானுடன் வாட்ஸ் அப் குழுவுடன் தொடர்புடையதாக வங்கதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோயம்புத்தூர் காந்தி பார்க் பகுதியில் உள்ள நகைபட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் பாரூக் கவுசீர். வங்கதேசத்தை சேர்ந்த இவர்,  பாகிஸ்தானின் முஜாகிதீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் இணைந்து பணியாற்றி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர், பாரூக் கவுசீரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் ஏதேனும் தகவல் பரிமாற்றம் நடந்துள்ளதாக என்ற கோணத்திலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உளவுத்துறை தமிழக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. தென் இந்தியாவில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கோவையிலும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY