இந்த 8 வழிச்சாலையால் எவ்வளவு நன்மைத் தெரியுமா? - முதல்வரின் விளக்கம்

தமிழகம்
Updated Jul 11, 2019 | 20:10 IST | Times Now

மத்திய அரசு ராணுவத் தளவாடங்கள் அமைப்பதாகத் தெரிவித்தார்கள், அதற்கும் இந்த 8 வழிச் சாலை உதவியாக இருக்கும். என்று முதல்வர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி  |  Photo Credit: Twitter

இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வு, சேலம் 8 வழிச்சாலை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். 

செய்தியாளர்கள் மக்கள் சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஏதிர்ப்பு கூறிவருகிறார்கள் இருப்பினும் அதன் வேலைகள் நடந்து வருகிறதே என்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ’’இந்தத் திட்டம் மாநில அரசு திட்டம் கிடையாது, முதலில் நீங்கள் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்தச் சாலையால் விவசாயிகளுக்கு  எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படாது. பம்பு செட் ஆனாலும் சரி, பசுமாட்டுக் கொட்டகை என்றாலும் சரி, அனைத்துக்குமே நாங்கள் நஷ்ட ஈடு கொடுத்துதான் வருகிறோம். அப்படி இருக்கும்போது சிலரால் இந்தத் திட்டம் எதிர்ப்பு கிளம்பிவருகிறது, அதனை மத்திய அரசு சந்தித்து வருகிறது.

மேலும் இது ஒரு எக்ஸ்பிரஸ் வழி. சேலம் வழியாகவும் செல்லுகிறதே தவிர சேலத்துக்கான திட்டம் அல்ல. இந்த சாலையால் 70 கிமீ தூரப் பயணம் குறையும். இந்தத் திட்டம் வந்தால் தமிழக அரசுக்கு நல்லபெயர் கிடைக்கும். அதனைத் தடுக்கவே சிலர் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். 2001க்குப் பிறகு இப்படி ஒரு சாலை அமைக்கப்படவே இல்லை. போக்குவரத்து அதிகம் ஆகிவிட்டது. அதனால் மக்கள், விபத்து இல்லாமல், விரைந்து செல்லக்கூடிய, குறைந்த எரிபொருளை உபயோகித்துச் செல்லக்கூடிய அளவில் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த சாலை அமைக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு ராணுவத் தளவாடங்களும் அமைப்பதாகத் தெரிவித்தார்கள், அதற்கும் இந்த சாலை உதவியாக இருக்கும். நமது உட்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால்தான், வெளிநாடுகளில் இருந்து தொழில் துவங்க இங்கு வருவார்கள்’’ என்று தெரிவித்தார். 

நீட் பற்றிய கேள்விக்கு, ‘’ முதன்முதலில் நீட் பற்றி நோட்டிஃபிகேஷன் வெளியானது காங்கிரஸ்- திமுக ஆட்சியில்தான். ஆனால் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதும் எங்கள் மீது பழி போடுகிரது திமுக என்று கூறினார். 
மேலும் ராசிபமணல் அருகே அணி கட்டுவதுபற்றிய கேள்விக்கு, உச்சநீதிமன்றம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு யாரும் புதிதாக அணைக் கட்டக் கூடாது என்று கூறியிருக்கிறது. அந்த தீர்ப்பை மீறி நாம் அணைக் கட்டக் கூடாது என்று தெரிவித்தார். 

NEXT STORY
இந்த 8 வழிச்சாலையால் எவ்வளவு நன்மைத் தெரியுமா? - முதல்வரின் விளக்கம் Description: மத்திய அரசு ராணுவத் தளவாடங்கள் அமைப்பதாகத் தெரிவித்தார்கள், அதற்கும் இந்த 8 வழிச் சாலை உதவியாக இருக்கும். என்று முதல்வர் தெரிவித்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை