7 தமிழர் விடுதலை, சட்டமன்றக் கூட்டத்தொடர்?-ஆளுநரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகம்
Updated Jun 12, 2019 | 21:33 IST | Times Now

இந்த சந்திப்பில், ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்த வேண்டாம் என ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

tamil nadu, தமிழ்நாடு
ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை ராஜ்பவனில் சந்தித்து உரையாடினார். 

இந்த சந்திப்பில், ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்த வேண்டாம் என ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

மேலும், புதிய தலைமைச்செயலாளர் நியமனம் மற்றும் டிஜிபி நியமனம் தொடர்பாகவும், பல்வேறு முக்கிய அரசு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து உரையாடினார். இந்நிலையில்தான் இன்று இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

டிஜிபி ராஜேந்திரன் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய நியமனம் குறித்து உரையாடியதாக தெரிகிறது. மேலும், சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NEXT STORY