தங்கத் தமிழ்செல்வன் ஆடியோ விவகாரம்... டிடிவி முக்கிய ஆலோசனை!

தமிழகம்
Updated Jun 25, 2019 | 10:53 IST | Times Now

டிடிவி தினகரன் வீட்டில் அமமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.

டிடிவி தினகரன், தங்கத் தமிழ்ச்செல்வன்
டிடிவி தினகரன், தங்கத் தமிழ்ச்செல்வன்  |  Photo Credit: Twitter

தங்கத் தமிழ்செல்வன் தினகரைப் பற்றி தரக்குறைவாகப் பேசிய ஆடியோ விவகாரம் தொடர்பாக, டிடிவி தினகரன் வீட்டில் அமமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.

டிடிவி தினகரன் கட்சி தொடங்கியதில் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வருபவர் தங்கத் தமிழ்செல்வன். எப்போதும் அமமுக கட்சியின் பிரதிநிதியாக பேசுவதும் அவரே. டிடிவி தினகரன் சார்பாக பல முக்கிய முடிவுகளையும் கருத்துக்களையும் சொல்லும் அதிகாரமும் அவருக்கு இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் அதிமுக அமைச்சர் ஜெய்க்குமார் சசிகலா, டிடிவி தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்துக் கொள்வோம், தங்கத் தமிழ்செல்வம் வந்தாலும் கூட சேர்த்துக்கொள்வோம் என்று கூறினார்.

இந்நிலையில்தான் தங்கத் தமிழ்செல்வன் டிடிவியின் உதவியளரிடம் தினகரைப் பற்றி தரக்குறைவாகப் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி  இருக்கிறது. அந்த ஆடியோவில் டிடிவி தனகரனும் தலைமை சரியில்லை என்ற தொணியில் பேசியிருக்கிறார். இந்நிலையில் புதிய தலைமுறை இதுபற்றி கேட்டதற்கு அவர் இந்த ஆடியோவை மறுக்கவில்லை, அப்படி நான் பேசியது தவறென்றால் கட்சியை விட்டு நீக்கவேண்டியது தானே என்று கூறியுள்ளார். இதனால் தங்கத் தமிழ் செல்வன் வேண்டும் என்றேதான் இவ்வாறு பேசி கட்சியை விட்டு வெளியேறி தாய்க் கழகமான அதிமுகவில் இணையும் நோக்கில் பேசியிருக்கிறார் என்று அமமமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். மேலும் நடைபெற்ற தேர்தலில் அமமுகவின் தோல்விக்குப் பிறகு தங்கத்தமிழ் செல்வனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள். இந்நிலையில்தான் தற்போது அடையாற்றில் உள்ள டிடிவியின் வீட்டில் தற்போது முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது.
 

NEXT STORY
தங்கத் தமிழ்செல்வன் ஆடியோ விவகாரம்... டிடிவி முக்கிய ஆலோசனை! Description: டிடிவி தினகரன் வீட்டில் அமமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles