ஆழியாறு அணையை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகம்
Updated Aug 17, 2019 | 18:14 IST | Times Now

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Aliyar Dam, Aliyar Reservoir, ஆழியாறு அணை
ஆழியாறு அணை  |  Photo Credit: Twitter

சென்னை: கோயம்புத்தூர் ஆழியாறு அணையிலிருந்து நாளை முதல் ஆண்டு இறுதி வரை நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு நீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது: ”கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக பாசனத்திற்கு 18.8.2019 முதல் 31.12.2019 முடிய 135 நாட்களுக்கு தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தைனைப் பொறுத்து, ஆழியாறு அணையிலிருந்து 1059 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.”

”இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’’ என்று முதல்வர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக தஞ்சையிலுள்ள கல்லணை இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

NEXT STORY
ஆழியாறு அணையை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு Description: இதனால் கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை