சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா!

தமிழகம்
Updated Sep 07, 2019 | 15:28 IST | Times Now

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தஹில் ரமானி இந்த முடிவை எடுத்துள்ளார்.

VK Tahilramani, தஹில் ரமானி
தஹில் ரமானி | Photo Courtesy: TNDALU 

புது டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தம்மை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தஹில் ரமானி இந்த முடிவை எடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோருக்கு அனுப்பினார் தஹில் ரமானி.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. மேலும், மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

ஆகஸ்டு 28-ஆம் தேதி தஹில் ரமானியை பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த நிலையில், அம்முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்திடம் தஹில் ரமானி முறையிட்டார்.

தமது முடிவை மாற்றிக்கொள்வதில்லை என்று தீர்மானித்த கொலீஜியம், தஹில் ரமானியின் கோரிக்கையை நிராகரித்தது. இதனை தொடர்ந்து தஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...