'சட்டென்று மாறுது வானிலை’ - திடீர் மேகமூட்டம்..குளிர்ந்த சூழலால் சென்னை மக்கள் மகிழ்ச்சி!

தமிழகம்
Updated Jun 19, 2019 | 18:29 IST | Times Now

சென்னையில் பருவமழை பொய்த்துப் போனதால் நிலைமை கடும் மோசமாக உள்ளது. அனல் காற்றும் மக்களை வதைத்து எடுக்கிறது.

chennai city, சென்னை
மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: சென்னை மாநகரையே மழையின்றி தண்ணீர்ப்பஞ்சம் பிடித்து ஆட்டி வருகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக வெயிலும் கொளுத்தி எடுக்கும் நிலையில் இன்று திடீரென்று குளிர்ச்சியான வானிலை நிலவியது சென்னைவாசிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய பொழுதில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெப்பம் அதிகரிப்பது குறையவில்லை. கேரளத்தின் தென்மேற்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது.

ஆனாலும், பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். பருவமழையும் சரிவர இல்லாததால் தண்ணீர்ப்பஞ்சமும் மக்களை வாட்டி வருகிறது.

சென்னையில் பருவமழை பொய்த்துப் போனதால் நிலைமை கடும் மோசமாக உள்ளது. அனல் காற்றும் மக்களை வதைத்து எடுக்கிறது.

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் சென்னையில் வெப்பம் முழுவதுமாக குறைந்து, வானிலை மெதுமெதுவாக குளிர்ச்சியானது. இந்த நிலை மாலை வரை நீடித்துள்ளது. இதனால் மழை வரும் என்கிற நம்பிக்கையில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

NEXT STORY
'சட்டென்று மாறுது வானிலை’ - திடீர் மேகமூட்டம்..குளிர்ந்த சூழலால் சென்னை மக்கள் மகிழ்ச்சி! Description: சென்னையில் பருவமழை பொய்த்துப் போனதால் நிலைமை கடும் மோசமாக உள்ளது. அனல் காற்றும் மக்களை வதைத்து எடுக்கிறது.
Loading...
Loading...
Loading...