தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

தமிழகம்
Updated Jul 08, 2019 | 07:46 IST | Times Now

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

chennai private water tanker strike call off
chennai private water tanker strike call off  |  Photo Credit: Twitter

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளனர்.து.

வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் வற்றிப்போய்விட்டதால் மக்கள் கார்ப்பரேஷன் குடிநீரை மட்டுமே நம்பி உள்ளனர். ஆனால் கார்ப்பரேஷன் குடிநீருக்கான முக்கிய ஆதாரமாகத் திகழும் ஏரிகளும் வற்றிக்கொண்டே வருவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசாங்கம் விநியோகம் செய்யும் தண்ணீர் லாரிகளை மக்கள் புக் செய்தும் வாரக்கணக்காகக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக விலை கொடுத்து தனியார் லாரிகளை நாடவேண்டி இருக்கிறது.

இந்நிலையில் முறையற்ற முறையில் தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் சில தனியார் லாரிகளை அதிகாரிகள் சிறைபிடித்தனர். மேலும் அரசு போதிய பாதுகாப்பு தரவில்லை என்றும் கூறி தனியார் தண்ணீர் லாரிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நிஜலிங்கம் இன்று முதல் தனியார் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதன் காரணமாக பல இடங்களில் சென்னையில் தனியார் லாரிகள் இயங்காமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனால் தற்போது அரசு உடனே அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எட்டப்பட்டு இருப்பதால் இன்று நடைபெறவிருந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக நிஜலிங்கம் தெரிவித்தார். 

NEXT STORY
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் Description: தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை