நினைவிடமாக மாறப்போகும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் - சென்னை ஆட்சியர் அறிக்கை

தமிழகம்
Updated Aug 14, 2019 | 20:48 IST | Times Now

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தினை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது என்பது முற்றிலும் பொருத்தமான ஒரு நடவடிக்கையாகும்.

Veda Nilayam
வேதா நிலையம்  |  Photo Credit: Twitter

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லம் ஆக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். வீடு அமைந்திருக்கும் போயஸ் தோட்டம் பகுதியின் குடியிருப்பு வாசிகளின் கருத்துகளை கேட்டறிந்த பிறகு மாவட்ட நிர்வாகம் தனது பரிந்துரைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக மாற்றம்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் மற்றும் அல்லாது இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராகவும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதால் அவர் வாழ்ந்து மறைந்த வேதா நிலையத்தினை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது என்பது முற்றிலும் பொருத்தமான ஒரு நடவடிக்கையாகும். குடியிருப்பு வாசிகளுக்கு இதனால் பெரிய அளவில் சிரமம் எதுவும் இருக்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள், மகனான தீபா மற்றும் தீபக் ஆகியோர் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

 

NEXT STORY
நினைவிடமாக மாறப்போகும் ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் - சென்னை ஆட்சியர் அறிக்கை Description: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தினை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது என்பது முற்றிலும் பொருத்தமான ஒரு நடவடிக்கையாகும்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...