பயணிகள் கவனத்திற்கு.. சென்னையில் நாளை 36 ரயில் சேவைகள் ரத்து

தமிழகம்
Updated Jul 20, 2019 | 12:25 IST | Times Now

பராமரிப்பு பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Local Train
Chennai Local Train  |  Photo Credit: Twitter

சென்னை: பராமரிப்பு பணியின் காரணமாக நாளை சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் 36 மின்சார ரயில் சேவை அன்றைய தினம் ரத்து செய்யப்படுகிறது. 

மதியம் 2 மணி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும். இதேபோல், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் காலை 10.30 மணி முதல் மதியம் 3.10 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

 

 

இதேபோல், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்திலும் காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் ரயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...