தேனியில் 1500 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது நியூட்ரினோ மையம் - மத்திய அரசு ஒப்புதல்

தமிழகம்
Updated Jul 11, 2019 | 20:53 IST | Times Now

தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் கிராமத்துக்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தேனி நியூட்ரினோ மையம் அமையவிருக்கும் இடம்
தேனி நியூட்ரினோ மையம் அமையவிருக்கும் இடம்  |  Photo Credit: Twitter

பல ஆண்டுகளாக தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் குறித்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆய்வகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டும் மத்திய சுற்றுச்சூழல் துறையும் தமிழக அரசும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டது மத்திய அரசு. இந்த ஆய்வகம் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரம் கிராமத்துக்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலைப்பகுதியில் உருவாக இருக்கிறது. இதற்காக இந்த மலையை சுமார் 2 கிமீ அளவுக்கு குடைந்து ஆய்வகம் அமைய இருக்கிறது. 

ஆனால் தேனி மக்கள் மட்டுமல்லாமல், தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எதிர்கட்சியினர் அனைவருமே தமிழகத்தில் மட்டும்தான் இவ்வளவு ஆபத்து மிக்க திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதனால் தேனியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைவதோடு, மலையில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கையும் பாதிப்படையும் என்று இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இது சம்பந்தமாக இன்று ராஜ்யசபாவில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘’ இந்தியாவிலே முதல்முறையாக நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் அமையவுள்ளது. கிட்டத்தட்ட 2 கிமீ அளவுக்கு மலையக் குடைந்து ஆய்வகம் அமைக்கவுள்ளோம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. கதிர்வீச்சு அபாயம் பற்றிய அச்சமும் தேவையில்லை என்று எழுத்துப்பூர்வமாகக் கூறியுள்ளார். மேலும் இந்தத் திட்டத்துக்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருபதாகவும் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு மித்திய அணுசக்தி துறை ஒப்புதலும் வழங்கியுள்ளது.  

NEXT STORY