மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஷால்

தமிழகம்
Updated May 25, 2019 | 15:16 IST | Times Now

சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் நடிகர் விஷால் தெரிவித்தார்.

Actor Vishal meets MK Stalin
Actor Vishal meets MK Stalin  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஷால்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதேபோல், இடைத்தேர்தல் நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள திமுகவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி உடனிருந்தார்.

இந்த சந்திப்பு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்,  தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை.  மக்களின் தீர்ப்பே இறுதியானது. சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என்றார்.
 

NEXT STORY
மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் விஷால் Description: சமூக சேவையில் விருப்பம் உள்ள யாரும் அரசியலுக்கு வரலாம் என திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் நடிகர் விஷால் தெரிவித்தார்.
Loading...
Loading...
Loading...