விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல்!

தமிழகம்
Updated Sep 21, 2019 | 14:14 IST | Times Now

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல்,by-election for vikravandi, Nanguneri assembly constituencies on october 21
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல்  |  Photo Credit: PTI

தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.வசந்தகுமார், 2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அதனை தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. பின்னர் கடந்த ஜுன் மாதம் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்கி,  செப்டம்பர் 30-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 64 தொகுதிகளுக்கு இந்த தேதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதே போல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

NEXT STORY
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல்! Description: விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை 17-ஆம் தேதி தொடக்கம் - வானிலை ஆய்வு மையம் தகவல்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
இளைஞர்கள் மிதிவண்டிப் பயணத்துக்கு மாற வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சசிகலா வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்: சொன்னது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
கீழடியில் இன்றுடன் அகழ்வாய்க்குழிகள் மூடப்படுகின்றன
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜீ தமிழகத்திற்கு செய்தது என்ன? - விவரம் உள்ளே...
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸூக்கு பொருந்தாதா? கே.எஸ். அழகிரி
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ரவிச்சந்திரன் பரோல் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்
முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழை; தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யும்