தலைமை செயலகம்,தமிழக தேர்தல் அதிகாரி அலுவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள்!

தமிழகம்
Updated May 20, 2019 | 17:24 IST | Times Now

 தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வந்த இந்த மர்ம கடிதத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

election 2019, தேர்தல் 2019
சத்ய பிரதா சாகு  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வந்த இந்த மர்ம கடிதத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

அனுப்புனர் விவரம் எதுவுமின்றி மொட்டைக் கடிதமாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதேபோன்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அலுவலக கட்டிடத்தின் முதல் தளத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

வரும் 23ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், இந்த மிரட்டல் தேர்தல் அதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புக்கு இடையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

NEXT STORY
தலைமை செயலகம்,தமிழக தேர்தல் அதிகாரி அலுவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள்! Description:  தேர்தல் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வந்த இந்த மர்ம கடிதத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 
Loading...
Loading...
Loading...