மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்

தமிழகம்
Updated Sep 16, 2019 | 20:46 IST | Times Now

சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Madras High Court
Madras High Court   |  Photo Credit: Twitter

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியைச் சேர்ந்த ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தானும், தனது மகனும் சேர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தாங்கள் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.  அத்துடன், தான் ஓரிடத்தில் இல்லாமல் மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், டெல்லி என மாநிலம் விட்டு மாநிலம் பயணத்தில் இருப்பதால், செல்போன் எண்ணை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறேன். ஆதலால் தன்னை தேட முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bomb Threat To Madras High Court

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளாா். இந்த கடிதம் குறித்து சென்னை மாநகர போலீஸ் ஆணையர் விசாரித்து வருகிறார். இருப்பினும் இதுதொடர்பாக டெல்லி போலீசாரின் உதவியை தமிழக போலீசார் நாடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனேனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள வந்துள்ள கடிதம் டெல்லி முகவரியில் இருந்து வந்துள்ளது. 

NEXT STORY