கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யவேண்டும்: தமிழிசை வழக்கு

தமிழகம்
Updated Jul 08, 2019 | 17:34 IST | Times Now

தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆன நிலையில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கனிமொழி - தமிழிசை சௌந்தரராஜன்
கனிமொழி - தமிழிசை சௌந்தரராஜன்  |  Photo Credit: Twitter

தூத்துக்குடியின் எம்.பி. கனிமொழியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்யவேண்டும் என்று அவருடன் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து பா.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டு சுமார் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கனிமொழி பல்வேறு குறைபாடுகளை உடைய வேட்புமனுவை சமர்பித்து வெற்றிபெற்றிருப்பதாகவும் இந்த வெற்றி செல்லாது எனவும் அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆன நிலையில் இன்று இது சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது,  தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அவரது வேட்பு மனுவில் பல்வேறு குறைகள் இருந்தது. அவரது மகனும் கணவரும் வெளிநாட்டுப் பிரஜைகள் எனவும் அது சம்பந்தமாக அவர் அஃபிடவிட் சான்றிதழை சமர்பிக்கவில்லை என்றும், இது போன்று பல குறைபாடுகள் இருந்ததை நாங்கள் சுட்டிக்காட்டியும் தேர்தல் அதிகாரிகள் அதனை பரிசீலனைச் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தனைக் குறைபாடுள்ள வேட்பு மனுவை அளித்து வெற்றிபெற்ற கனிமொழியின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்குத் தொடர்பாக எம்.பி. கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

NEXT STORY
கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யவேண்டும்: தமிழிசை வழக்கு Description: தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆன நிலையில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்குத் தொடர்ந்துள்ளார்.
Loading...
Loading...
Loading...