ஜூன் 8ம் தேதி நடைபெறவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்!

தமிழகம்
Updated May 16, 2019 | 20:34 IST | Times Now

ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பை முடித்து, பி.எட் பயிலும் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் ஜூன் 8 நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கல் தெரிவித்திருந்தனர்.

tamil nadu, தமிழ்நாடு
ஆசிரியர் தகுதித் தேர்வு  |  Photo Credit: Getty Images

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டு தேர்வுகள் ஜூன் 8 மற்றும் 9ம் தேதியன்று நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் 8ம் தேதி நடைபெறவிருந்த பி.எட் தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஜூன் 8ம் தேதி மற்றும் 9ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என்று அதற்கான தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பி.எட் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டுகளுக்கான இறுதிப் பருவத் தேர்வு நடைபெறுகிறது.

இதனையடுத்து ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பை முடித்து, பி.எட் பயிலும் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் ஜூன் 8 நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கல் தெரிவித்திருந்தனர். இதனால், மாணவர்களின் நலன் கருதி தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால், ஜூன் 8ம் தேதி நடைபெறவிருந்த பி.எட் தேர்வு ஜூன் 13ம் தேதியன்று பிற்பகல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயற்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

NEXT STORY
ஜூன் 8ம் தேதி நடைபெறவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்! Description: ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பை முடித்து, பி.எட் பயிலும் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் ஜூன் 8 நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கல் தெரிவித்திருந்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola