இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு; அடுத்த ஆண்டு முதல் அமல்!

தமிழகம்
Updated Sep 11, 2019 | 15:01 IST | Times Now

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இனி கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு, Arts and Science courses to have counselling
இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு  |  Photo Credit: Twitter

பொறியியல், மருத்துவப் படிப்புகளைப் போல இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.    

தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் ஆலோசிக்க தலைமை செயலாளர் கே.சண்முகம் தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், தமிழக உயர்கல்வித் துறை அதிகாரிகள் கலந்து ஆலோசித்தனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் போலவே இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்லபடுத்த மாநிலம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.     

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (Management Quota) வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு அது போன்ற கலந்தாய்வுகள் இல்லை. மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனியாக விண்ணப்பித்து, மதிப்பெண் மற்றும் இதர தகுதிகளின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். எனவே இனி அது போல இல்லாமல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. மேலும் இது அடுத்த கல்வி ஆண்டு 2020-2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரியவருகிறது.           

NEXT STORY
இனி கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு; அடுத்த ஆண்டு முதல் அமல்! Description: கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இனி கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை