கோவையில் வெட்டி வீழ்த்தப்பட்ட காதல் தம்பதி; கணவர் பரிதாப பலி!

தமிழகம்
Updated Jun 25, 2019 | 22:09 IST | Times Now

கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ்-வர்ஷினி. இவர்கள் இருவருடைய காதலுக்கும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியில் வந்து திருமணம் செய்து கொண்டனர்.

Kovai news, கோயம்புத்தூர் செய்திகள்
மாதிரிப்படம் 

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ்-வர்ஷினி. இவர்கள் இருவருடைய காதலுக்கும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியில் வந்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த காதல் தம்பதிகள் இன்று மேட்டுப்பாளையம் அருகே ஸ்ரீரங்கராயர் ஓடை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர்களை ஒரு கும்பல் சுற்று வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. 

இதில் சம்பவ இடத்திலேயே கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயங்களுடன் மனைவி வர்ஷினி சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கனகராஜின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கனகராஜின் சகோதரரின் தூண்டுதலால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

NEXT STORY
கோவையில் வெட்டி வீழ்த்தப்பட்ட காதல் தம்பதி; கணவர் பரிதாப பலி! Description: கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ்-வர்ஷினி. இவர்கள் இருவருடைய காதலுக்கும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியில் வந்து திருமணம் செய்து கொண்டனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles