தேவகோட்டை கோயில் குளத்தில் ஐம்பொன் அம்மன் சிலை கண்டுபிடிப்பு!

தமிழகம்
Updated May 26, 2019 | 16:25 IST | Times Now

குளத்தின் அடிஆழத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்த வருவாய்த்துறையினர் அம்மன் சிலையை மீட்டு, மேற்படி ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

tamil nadu, தமிழ்நாடு
கண்டறியப்பட்ட அம்மன் சிலை  |  Photo Credit: Twitter

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் கோயில் குளத்தை சுத்தம் செய்யும்போது இரண்டரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

தேவகோட்டை அருகே மிகப்பழமையான  கண்டதேவி என்கிற கிராமத்தில் பாரம்பரியமும், பழமையும் கொண்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. 

இக்கோயிலின் திருக்குளம் மாசடைந்து கிடந்தது. இதனையடுத்து தனியார் சமூக ஆர்வலர்கள் இணைந்து குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, குளத்தின் அடிஆழத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்த வருவாய்த்துறையினர் அம்மன் சிலையை மீட்டு, மேற்படி ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.

பெரம்பலூர், பொன்னகரம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இருந்து கடந்த 1996ம் ஆண்டு மாயமான லட்சுமி சிலையாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
தேவகோட்டை கோயில் குளத்தில் ஐம்பொன் அம்மன் சிலை கண்டுபிடிப்பு! Description: குளத்தின் அடிஆழத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்த வருவாய்த்துறையினர் அம்மன் சிலையை மீட்டு, மேற்படி ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர்.
Loading...
Loading...
Loading...