4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தினகரன்

தமிழகம்
Updated Apr 22, 2019 | 10:54 IST | Times Now

சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

TTV Dhinakaran, AMMK, டிடிவி தினகரன், அமமுக
டிடிவி தினகரன், அமமுக  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகத்தில் காலியாக இருக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டிலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்தன. இதில், மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. மீதமுள்ள சூலுர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் திங்கட்கிழமை தொடங்கியது.

திமுக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்:

சூலூர் - சுகுமார்

அரவக்குறிச்சி - சாகுல் ஹமீது

திருப்பரங்குன்றம் - மகேந்திரன்

ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தரராஜ்

NEXT STORY
4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் தினகரன் Description: சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
Loading...
Loading...