மானமதுரை: அமமுக ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொலை-மர்ம கும்பல் வெறியாட்டம்!

தமிழகம்
Updated May 26, 2019 | 16:19 IST | Times Now

மானமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். இன்றும் அவர் வழக்கம்போல வைகை ஆற்று பைபாஸுக்கு வந்த அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

tamil nadu, தமிழ்நாடு
மாதிரிப்படம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் சரவணன் என்பவர் வெட்டிக் கொலை செய்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைபாஸ் சாலையில் நடைபயிற்சிக்கு சென்ற சரவணனை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், மானமதுரை ஆவரங்காட்டைச் சேர்ந்தவர் சரவணன. 40 வயதான இவர் அமமுக கட்சியில் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள்.

மானமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். இன்றும் அவர் வழக்கம்போல வைகை ஆற்று பைபாஸுக்கு வந்த அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பர் சரவணனை சுற்றி வளைத்து வெட்டியது. இதில் சரவணன் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் துணை ஆய்வாளார் கார்த்திகேயன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். இது பிடிக்காததால் யாராவது கொலை செய்தார்களா என்பது முதல் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை பிடிக்க மாவட்டம்  முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
மானமதுரை: அமமுக ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொலை-மர்ம கும்பல் வெறியாட்டம்! Description: மானமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். இன்றும் அவர் வழக்கம்போல வைகை ஆற்று பைபாஸுக்கு வந்த அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை