தங்கத் தமிழ்ச் செல்வனை நீக்கம் செய்ய பயமில்லை - டிடிவி பேட்டி

தமிழகம்
Updated Jun 25, 2019 | 13:00 IST | Times Now

இன்று தனது வீட்டில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டட்துக்குப் பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்  |  Photo Credit: Twitter

தங்கத் தமிழ்ச் செல்வனின் ஆடியோ விவகாரம் தொடர்பாக டிடிவி தினகரன் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது வீட்டில் நடைபெற்ற அலோசனைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். 

ஆலோசனைக் கூட்டம் முடிந்து பேசிய டிடிவி தினகரன், ஆடியோவில் பேசியது போல அவர் விஸ்வரூபம் எல்லாம் எடுக்கமாட்டார். என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். அவர் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்று அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஏன் இவ்வாறு பேசுகிறீர்கள், சரியாக பேசாவிட்டால் நிகழ்ச்சிகளுக்கு சென்று பேட்டி அளிக்காதீர்கள். அப்படி தேவையில்லாமல் பேசினால் கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்திருந்தேன். 

கட்சியிலும் அவரைப் பற்றி பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்குப் பின்னரும் அவரிடம் விளக்கம் கேட்க அவசியல் இல்லை, அவரை நீக்குவதில் எனக்கு பயமும் இல்லை. நான் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதல் நிகழ்வாக ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவேண்டாம் என்று நினைக்கிறேன்.  அவர் வகிக்கும் கொள்கைப் பரப்பு செயலாளர் பதவிக்கு புதிதாக வேறொருவரை நியமனம் செய்யவிருக்கிறோம். அதன்பிறகு அவருக்கே புரியும். 

மேலும் இது அவருக்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் இல்லை. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட கூட்டம்தான் இது. கட்சி பற்றி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தவே இந்த கூட்டம் நடைபெற்றது. விரைவில் நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவோம், அது சம்பந்தமாகவும் இன்று பல முடிவுகள் எடுக்கப்பட்டது, மேலும் கட்சி தொடங்கியதில் இருந்தே யாரோ ஒருவர் தங்கத் தமிழ்ச்செல்வனுடன் பேசி அவரை இவ்வாறெல்லாம் பேசச் சொல்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. விரைவில் நீங்களும் தெரிந்து கொள்வீர்கள் என்று பேட்டி அளித்தார். 

NEXT STORY
தங்கத் தமிழ்ச் செல்வனை நீக்கம் செய்ய பயமில்லை - டிடிவி பேட்டி Description: இன்று தனது வீட்டில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டட்துக்குப் பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles