வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாததற்கு தினகரன் சொல்லும் காரணம் இதுதான் !

தமிழகம்
Updated Jul 08, 2019 | 12:53 IST | Times Now

அமமுகவை கட்சியாக பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்த பிறகு தேர்தல்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv dhinakaran, டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்  |  Photo Credit: Twitter

கடலூர்: நடைபெறவுள்ள வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்காக வரும் 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து அந்த தொகுதியில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது.

அதேபோல் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார். நாம்தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமிய போட்டியிடுகிறார். இதனால் அங்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருத்தாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளோம். அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. சுயேட்சையாக போட்டியிட வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அமமுகவுக்கு என நிலையான சின்னம் இன்னும் கிடைக்கவில்லை. பதிவு செய்த கட்சியாக , அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக, ஒரு புதிய சின்னத்தில் நிலையான சின்னத்தில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவோம். 
இதன் காரணமாக வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார்.
 

NEXT STORY
வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடாததற்கு தினகரன் சொல்லும் காரணம் இதுதான் ! Description: அமமுகவை கட்சியாக பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்த பிறகு தேர்தல்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles