சென்னையில் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க வருகிறது ’அம்மா பேட்ரோல்’!

தமிழகம்
Updated Aug 13, 2019 | 15:24 IST | Times Now

சென்னையில் 'அம்மா பேட்ரோல்' என்ற பெயரில் 35 ரோந்து வாகனங்கள் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கேரளாவில் ஏற்கனவே இத்திட்டம் பிங்க் ரோந்து வாகனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

'Amma Patrol' car
’அம்மா பேட்ரோல்’ ரோந்து வாகனம்  |  Photo Credit: Twitter

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட காவல்துறைப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனங்களை உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் இத்திட்டம் ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது.

கேரளாவில் ஏற்கனவே இத்திட்டம் பிங்க் ரோந்து வாகனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. புதிதாக அறிமுகப்படத்தப்பட உள்ள பிங்க் நிற ரோந்து வாகனங்களில் பெண்களுக்கான உதவி எண் 1091 மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 ஆகியவை அச்சிடப்பட்டுள்ளது. அடுத்த வாரம், சென்னையில் 35 'அம்மா பேட்ரோல்' ரோந்து வாகனங்களை முதற்கட்டமாக முதலமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழகத்தில் ஏடிஜிபி ரவி தலைமையில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. மாவட்டம் தோறும் இதற்கென பிரத்யேக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது இப்பிரிவு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், வயதானவர்களுக்கு உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்களில் ’அம்மா பேட்ரோல்’ ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

NEXT STORY
சென்னையில் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க வருகிறது ’அம்மா பேட்ரோல்’! Description: சென்னையில் 'அம்மா பேட்ரோல்' என்ற பெயரில் 35 ரோந்து வாகனங்கள் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கேரளாவில் ஏற்கனவே இத்திட்டம் பிங்க் ரோந்து வாகனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...