ஆட்சி மாற்றத்தைத் தவறவிட்ட திமுக, இடைத்தேர்தலில் சீமான், டிடிவி, கமலின் நிலைமை என்ன!?!

தமிழகம்
Updated May 24, 2019 | 12:09 IST | Times Now

ஆச்சர்யமாக முதல் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி நல்ல வாக்கு எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. 

டிடிவி, ஸ்டாலின், சீமான்
டிடிவி, ஸ்டாலின், சீமான்  |  Photo Credit: Twitter

17-வது மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. முதற்கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி 18 தொகுதிகளுக்கும், மே 19-ஆம் தேதி 4 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நேற்று அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக 13 தொகுதிகளிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றிபெற்றது. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில், இந்த 9 தொகுதிகளின் வெற்றியின் மூலம் அதிமுக கூட்டணி, கைவசம் டிடிவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரைத் தவிர 120 இடங்களைத் தன் வசம் வைத்துள்ளது. அதனால் அதிமுகவின் ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை என்று அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.  ஆச்சர்யமாக முதல் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி நல்ல வாக்கு எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. 

இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி குறைந்தது 3-4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதுவும் பல இடங்களில், குறிப்பாக பெரம்பூர், ஓசூர் ஆகிய தொகுதிகளில் மூவாயிரத்துக்கும் குறைவான் வாக்குகளும் எட்டு தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் குறைவான அவாக்குகளும் பெற்றுள்ளது. 

நாம் தமிழர் கட்சியோ தஞ்சாவூர், பூந்தமல்லி தொகுதியைத தவிர மற்ற இடங்களில் பத்தாயிரம் வாக்குகளைக்கூட பெறவில்லை. அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10,819 வாக்குகளும் தஞ்சையில் 11,182 பெற்றது. இவற்றோடு ஒப்பிடும்போது சமீபத்தில் கட்சி தொடங்கிய மக்கள் நீதி மய்யம் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 

NEXT STORY
ஆட்சி மாற்றத்தைத் தவறவிட்ட திமுக, இடைத்தேர்தலில் சீமான், டிடிவி, கமலின் நிலைமை என்ன!?! Description: ஆச்சர்யமாக முதல் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் பல இடங்களில் நாம் தமிழர் கட்சியைத் தாண்டி நல்ல வாக்கு எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. 
Loading...
Loading...
Loading...