சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 21-ல் அதிமுக விருப்பமனு

தமிழகம்
Updated Apr 19, 2019 | 18:09 IST | Times Now

நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

AIADMK release statement about four constituency by election
அதிமுக விருப்பமனு அறிவிப்பு  |  Photo Credit: Twitter

சென்னை: சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு விண்ணப்பங்களை ஏப்ரல் 21-ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 மக்களவைத் தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதோடு புதுச்சேரியில் உள்ள 1 மக்களவை தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதனிடையே, மீதமுள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19-ல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கூறிய இந்த 4 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குக்கான இடைத் தேர்தல் மே 19-ம் அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000 செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 

NEXT STORY
சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: ஏப்ரல் 21-ல் அதிமுக விருப்பமனு Description: நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...