ஜூன் 28 ஒரே நாளில் அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் -சட்டமன்ற கூட்டமும் அன்றே!

தமிழகம்
Updated Jun 26, 2019 | 20:28 IST | Times Now

தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தலை காரணம் காட்டி மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் அவை கடந்தமுறை ஒத்திவைக்கப்பட்டது.

tamil nadu, தமிழ்நாடு
தலைமைச் செயலகம்  |  Photo Credit: Twitter

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் வருகின்ற  28ம் தேதியன்று நடைபெற உள்ளதாக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தலை காரணம் காட்டி மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் அவை கடந்தமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வருகின்ற ஜூன் 28ம் தேதியன்று மீண்டும் சட்டமன்றம் கூட உள்ள நிலையில், அதே நாளில் அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டமும் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

அதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 28ம் தேதியன்று காலை 11 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்-துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே நாளில்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
ஜூன் 28 ஒரே நாளில் அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் -சட்டமன்ற கூட்டமும் அன்றே! Description: தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தலை காரணம் காட்டி மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் அவை கடந்தமுறை ஒத்திவைக்கப்பட்டது.
Loading...
Loading...
Loading...