நேத்து நான் ஆடியிருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகம்
Updated Jul 11, 2019 | 13:24 IST | Times Now

நான் ஆடியிருந்தால் இந்திய கிரிக்கெட் அணி, அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

AIADMK Minister jayakumar, அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்  |  Photo Credit: ANI

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக சிறுதோல்வியை சந்தித்தது போல் இந்திய கிரிக்கெட் அணியும் பின்னடைவை சந்தித்தது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் 309-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃப. பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், நீட் விவகாரம் குறித்து  சட்டசபையில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. நீட் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் செய்த தவறுகளை சட்டசபையில் தோலுரித்து காட்டினோம். தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால், பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. கச்சதீவாக ஆகட்டும் காவிரி நீர் ஆகட்டும் தமிழக உரிமைகளை நிலைநாட்டும் கட்சி அதிமுக. 

அரசியலிலும், கிரிக்கெட்டிலும் வெற்றி, தோல்வி சகஜமே. மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறுதோல்வியை சந்தித்தது போல இந்திய கிரிக்கெட் அணியும் பின்னடைவை சந்தித்தது. எதிர்வரும் காலத்தில் அதிமுகவும் வெற்றி பெறும் இந்திய அணியும் வெற்றி பெறும். நான் விளையாடி இருந்தால் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறினார்.

NEXT STORY
நேத்து நான் ஆடியிருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் Description: நான் ஆடியிருந்தால் இந்திய கிரிக்கெட் அணி, அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
Loading...
Loading...
Loading...