சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகம்
Updated Apr 23, 2019 | 13:38 IST | Times Now

தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

AIADMK announces candidates for the four bye-elections
4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு 

சென்னை: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கிவிட்டது. திமுக, அமமுக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர்.

 

 

அதன் விவரம்: 

சூலூர் - வி.பி. கந்தசாமி

அரவக்குறிச்சி - வி.வி. செந்தில்நாதன்

திருப்பரங்குன்றம் - எஸ்.முனியாண்டி

ஒட்டப்பிடாரம் (தனி) - பெ.மோகன்

 

 

 

 

NEXT STORY
சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு Description: தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
Loading...
Loading...