ஓட்டு போட்டு வந்தால் 10 சதவீதம் தள்ளுபடி.. ஹோட்டல்கள் சங்கம் அறிவிப்பு

தமிழகம்
Updated Apr 15, 2019 | 16:19 IST | S.Karthikeyan

தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தம் வகையில் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

10 percent discount for eating in all hotels, ஓட்டு போட்டு வந்தால் 10 சதவீதம் தள்ளுபடி,
Representative Image  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று ஓட்டு போட்டதற்கு அடையாளமாக கைவிரலில் வைக்கப்படும் மை அடையாளத்தை காண்பித்தால் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் 18-ம் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு நூறு சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்களிப்பவர்களின் சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையமும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று வாக்களித்தவர்கள் தங்கள் கையில் விரல் மை வைத்த அடையாளத்தை காட்டி பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடியை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் உட்லண்ஸ் ரவி, தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-ம் தேதி ஓட்டு போட்டதற்கு அடையாளமாக கைவிரலில் வைக்கப்படும் மை அடையாளத்தை காண்பித்தால் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கிட தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும். அதே நேரம் பார்சல்களுக்கு இது பொருந்தாது.

சென்னை முழுவதும் மொத்தம் 4000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. இதில் 2500 ஹோட்டல் எங்களுடைய சங்கத்தில் உள்ளது. எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத ஹோட்டல்களிலும் 10 சதவீத தள்ளுபடி வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17-ந் தேதி ஹோட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம். இதேபோன்று தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பார்சல் வாங்குபவர்கள் பாத்திரங்கள் கொண்டு வந்தால் சலுகை வழங்கி வருகிறோம். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். 

NEXT STORY
ஓட்டு போட்டு வந்தால் 10 சதவீதம் தள்ளுபடி.. ஹோட்டல்கள் சங்கம் அறிவிப்பு Description: தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தம் வகையில் பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Loading...
Loading...
Loading...