இயல்பு நிலைக்குத் திரும்பிய மாமல்லபுரம்! - வியாபாரிகள் மகிழ்ச்சி

தமிழகம்
Updated Oct 13, 2019 | 12:37 IST | Times Now

நேற்று தலைவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திலிருந்து கிளம்பியதால் இன்றுமுதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

After PM Modi - Jinping meet Mamallapuram opens for public from today
After PM Modi - Jinping meet Mamallapuram opens for public from today  |  Photo Credit: Twitter

கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரம் பார்வையிட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இவர்களின் சந்திப்பு நேற்று மதியம் முடிவடைந்த நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பியது. சுற்றுலா பயணிகள் இன்று முதல் மாமல்லபுரத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்களும் சுற்றுலா தளத்தை பார்வையிட வந்ததால் மின் விளக்குகள் போடப்பட்டு மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் அந்த இடத்தை பார்க்க ஆர்வம் காட்டுவதால் இன்று கூட்டம் அதிகமாகவே உள்ளது.

 இருநாட்டு தலைவர்களும் வருவதையொட்டி பல வாரங்களாகவே மாமல்லபுரம் பகுதிகளில் சிறு வியாபாரிகள் கடை போட தடை விதிக்கப்பட்டது. புதிய சாலைகள் அமைக்கப்பட்டன, சாலையோரங்களில் புதிதாக வண்ணங்கள் பூசப்பட்டன, அலங்கார விளக்குகள் இரவிலும் மின்னும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்து, சீன அதிபரை அழைத்துக்கொண்டு ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை, கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை பற்றி விளக்கம் அளித்தார். அங்கே அவருடன் இளநீரும் பருகி மகிழ்ந்தார். இருநாட்டு தலைவர்களும் இந்த இடங்களிலெல்லாம் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த எட்டாம் தேதி முதல் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.  நேற்று தலைவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திலிருந்து கிளம்பியதால் இன்றுமுதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இன்று முதல் மூடப்பட்ட கடைகளும் வழக்கம்போல் தொடங்கும். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் இத்தனை நாட்களாக மந்தமான வியாபாரத்தில் இருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...